மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அவனியாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட சேர்மத்தாய் வாசன் கல்லூரி ஜங்சன் ரோட்டின் அருகே அடையாளம் தெரியாத வெள்ளைநிறப் பை ஒன்று, இன்று காலை கிடந்துள்ளது.
ரோட்டில் தனியேக் கிடந்த பையில் வெடிகுண்டுகள்! - திருப்பரங்குன்றம் செய்திகள்
திருப்பரங்குன்றம்: நான்கு வழிச்சாலையில் ரோட்டின் நடுவே கிடந்தப் பையிலிருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், நான்கு வாள்கள் உள்ளிட்டப் பொருட்களை அவனியாபுரம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

a bag with bombs and swords seized at Thiruparankundram
police caught a bag filled with swords and bombs
ரோட்டில் தனியே கிடந்த பையைக்கண்டு சந்தேகமடைந்த அவனியாபுரம் காவல்துறையினர், அதனைக் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், டி. எஸ் பட்டணம் மூக்குப்பொடி டப்பாவினுள் அடைக்கப்பட்ட வெடிமருந்து, பிளாஸ்டிக் பையில் நிரப்பப்பட்ட மண்ணெண்ணெய் வாடையுடன் கூடிய பொருட்கள், நான்கு வாள்கள் இருந்துள்ளன. இப்பொருட்களை அவனியாபுரம் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சீன அதிபரின் அழைப்பை ஏற்ற மோடி!