மதுரை, வில்லாபுரம் ரகுமான் பள்ளிவாசல் தெருவில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலி பீடி பண்டல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
மதுரையில் பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி தயாரிப்பு - போலீஸ் விசாரணை! - police seized 2 lakhs worth fake beedi packets at madurai
மதுரை: பிரபல நிறுவனத்தின் பெயரில் பீடி தயாரித்து விற்பனை செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தகவலின்பேரில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டதில், முருகேசனுக்கு சொந்தமான குடோனில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாபர் என்பவர் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடி தயாரித்து வந்தது உறுதியானது.
இதையடுத்து, குடோனில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், இரண்டு லட்சம் மதிப்பிலான போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உரிமையாளர் ஜாபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.