மதுரையில் உள்ள ஜயர் பங்களா பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம். இவர் சொந்தமாக மிளகு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்மா என்ற இளைஞர் ஒருவர், சுமார் இரண்டாயிரத்து 310 கிலோ மிளகு வாங்கியுள்ளார்.
மோசடி செய்த வடமாநில இளைஞருக்கு காவல் துறை வலைவீச்சு! - madurai
மதுரை: மிளகு வியாபாரியிடம் பொருட்கள் வாங்கிவிட்டு சுமார் எட்டு லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவான வடமாநில இளைஞரை காவல் துறை வலைவீசி தேடி வருகிறது.
மோசடி
மிளகை வாங்கிவிட்டு பணத்தை பிறகு தருவதாக தெரிவித்த சர்மா, அவர் கொடுக்கவேண்டிய எட்டு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை தராமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.