யூ-டியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் மீது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள அவரின் வீட்டில் சென்னை மாநகர் தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, விசாரணை நடத்துவதற்கான ஆவணங்களை காண்பித்து உள்ளே வருமாறு முதலில் மாரிதாஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உரிய விளக்கமளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று மாரிதாஸ் பயன்படுத்திய லேப்-டாப், மொபைல், பென்-டிரைவ் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர்.