தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு - Avaniyapuram

மதுரை: காதணி விழாவிற்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாத தெரியாத இருவர் 3 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து அவனியாபுரம் காவல் துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

chain flush

By

Published : Apr 2, 2019, 11:16 AM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனியைச் சேர்ந்த ராமசாமியின்மகள் பாலுத்தாய் (35).இவர் மாநகராட்சி காலனியில் உறவினர் காதணி விழா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

பின்னர், வீடு திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத இருநபர்கள் பாலுத்தாயின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து பாலுத்தாய் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, காவல் துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வுமேற்கொண்டபோது, அப்பகுதியில்சிசிடிவிகேமரா இருப்பது தெரியவந்தது. இதையடுத்துஅதை ஆய்வு செய்ததில் செயினை பறித்துக் கொண்டு இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து அவனியாபுரம் காவல் துறையினர் குற்றவாளிகளை வலைவீசிதேடிவருகின்றனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

ABOUT THE AUTHOR

...view details