ஊரங்கு உத்தரவின் காரணமாக அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர்.
இதேபோல், மதுரை பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியில் தென்னந்தோப்பிற்குள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக பாலமேடு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். அங்கு அப்பகுதியைச் சேர்ந்த காவேரி என்ற இளைஞர் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தார். பின்னர், காவல் துறையினர் வருவதைக் கண்ட இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார்.
கள்ளச்சாராயம் காய்ச்சிய இளைஞர் தப்பியோட்டம் இதையடுத்து அங்கிருந்த 35 லிட்டர் ஊறலை அழித்த காவல் துறையினர், தப்பியோடிய இளைஞரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...!