மதுரை: மதுரை வளர்நகர் அருகே ராஜீவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் ஆகிய 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முதல் குற்றவாளியாக, பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரவுடியான வண்டியூரைச் சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதிகள் குறித்து அடையாளம் காட்டுவதற்காக இன்று (பிப்.28) காலை போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.