தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி அருகே உள்ள ஆழ்துளைக் குழியை மூடிய காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை : பேரையூரில் பள்ளிக்கு அருகே மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் குழியை பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப காவல் துறையினர் உடனடியாக மூடியுள்ளனர்.

ஆழ்துளை குழியை மூடிய காவலர்கள்

By

Published : Oct 29, 2019, 4:27 PM IST

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னகட்டளைப் பகுதியில் கட்டையன் கோயிலின் அருகே தோண்டப்பட்ட ஆழ்துளைக் குழி ஆபத்தான நிலையில் மூடப்படாமலிருந்துள்ளது.

ஆபத்தான நிலையில் ஆழ்துளைக் குழி

இதன் அருகே அரசுப் பள்ளியும் இயங்கிவருவதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக குழியை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆழ்துளைக் குழியை மூடிய காவலர்கள்

இதனையறிந்த பேரையூர் தாலுகா சேடபட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் பாலுச்சாமி, காவலர் கருப்பையா ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன் அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் குழியை பாதுகாப்பாக மூடினர்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாகத் தீர்த்துவைத்த காவல் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க : பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details