மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களும் காவலர்களும் பயன்பெறும் வகையில் காவல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'காவல் உணவகம்' திறப்பு! - காவல் கண்காணிப்பாளர்
மதுரை: காவல் துறை சார்பில் காவலர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
File pic
இந்த உணவனகத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் திறந்துவைத்தார். இங்கு காலை, மதிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளைக் கொண்டு உணவு தயார் செய்யப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காவல் துறை அலுவலர்களும் பயன்பெறும் வகையில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர்.