தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி மருத்துவர் கைது

மதுரையில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு தனது வீட்டில் வைத்து சிகிச்சையளித்து வந்த மீனாட்சி என்ற போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

mdu
mdu

By

Published : Dec 16, 2022, 9:03 PM IST

மதுரை: சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்மணி, எம்பிபிஎஸ் படிக்காமலேயே தனது வீட்டில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தன்னை மருத்துவர் என கூறிக் கொண்டு, பல மாதங்களாக நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கி வந்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் செல்வராஜ், பார்மசிஸ்ட் பால செந்தில் ஆகியோர் சம்மட்டிபுரத்தில் இன்று (டிச.16) நேரடியாக ஆய்வு நடத்தினர். அதில், மீனாட்சி போலி மருத்துவர் என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து எஸ்.எஸ். காலனி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மீனாட்சியை கைது செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இன்குபேட்டர் மூலம் பாம்பு வளர்ப்பு.. இளைஞரின் வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details