தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை; மதுரையில் சிக்கிய இருவர்! - lottery ticket

மதுரை: அலங்காநல்லூரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

prohibited lottery ticket
லாட்டரி சீட்டு விற்பனை

By

Published : Dec 16, 2019, 5:18 AM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்வராஜ் காம்ப்ளக்ஸில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துறையினர் மாறுவேடத்தில் லாட்டரி சீட்டு வாங்குவது போல் நடித்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், ‘மதுரை உச்ச பரம்புமேடு பகுதியைச் சேர்ந்த கமலதாசன் (42), ஈரோட்டைச் சேர்ந்த ராஜா (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை; மதுரையில் இருவர் கைது

மேலும், அவர்களிடமிருந்து ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பூட்டான் மாநிலத்தின் 1134 லாட்டரி சீட்டுகளும், ரூ.15 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தற்போது, அவர்களை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மூன்றே நாளில் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம் - டிராய் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details