மதுரை:அ.கல்லுப்பட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் நேற்று (அக்.20) மாலை எல்லீஸ்நகர் 70 அடி ரோட்டில் உள்ள மதுபானக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் கும்பல் அருண் பிரகாஷிடம் தங்களுக்கு இலவசமாக மதுபானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அருண் பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலால் அருண்பிரகாஷை தாக்கியதுடன் மதுபானக் கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.