மதுரை:இரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்திலும், அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள், ஜன் ஔஷதி திட்டம் மூலம் மருந்துப் பொருட்கள் கிடைக்கச் செய்யவும் மற்றும் தொழில்முனைவோருக்கு பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா (Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendra PMBJK)-களைத் திறப்பதற்கான வழிகளை உருவாக்கவும், மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில், பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராவை (PMBJKs) நிறுவ ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, இரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள், மருத்துவ உதவிகளில் பயனடையும் வகையில், திண்டுக்கல் இரயில் நிலையத்தின் வெளிப்புற பகுதியில் மருத்துவ விற்பனை நிலையத்தை ரயில்வே அமைக்க உள்ளது. இந்திய இரயில்வே மின் கொள்முதல் அமைப்பு (Indian Railways E-Procurement System - IREPS) இல் மின்-ஏலத்தின் மூலம் அதிக ஏலம் எடுத்தவருக்கு கடை அமைக்க 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படும். வெற்றிகரமான ஏலதாரர்கள் மருந்துக் கடையை நடத்துவதற்குத் தேவையான அனுமதிகள் மற்றும் உரிமத்தைப் பெற வேண்டும் மற்றும் மருந்துகளை சேமிப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ விதிகளுக்கும் இணங்க வேண்டும்.