மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இயந்திர பழுது காரணமாக ஆலை இயங்கவில்லை. இதையடுத்து, மதுரை கே.கே.நகர்ப் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி பகுதியில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலையை நம்பி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்கின்றனர்.
இந்தநிலையில், இயந்திரம் பழுது காரணமாக ஆலையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இயந்திர பழுதை நீக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.