மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை சட்ட விரோதமானது என அறிவிக்க மனு! - தமிழக அரசு
மதுரை: 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் அச்சப்படும் சூழலும், அதன் காரணமாக அவர்களின் கற்றல் பாதிக்கும் நிலையும் உருவாகும். கல்வி என்பது மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. சமூகத்தில் மதிப்பினை பெற்றுத் தருவதோடு தனிமனிதனும் தன்னை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமைகிறது. ஆனால் தேர்வு எழுதி தேர்ச்சி அடையவில்லை என குழந்தைகளிடம் கூறும்போது அது அவர்களின் கற்றலை பாதிப்பதாக அமைகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவித்து அதனை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.