தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை வந்த முதலமைச்சரின் காரை வழிமறித்த விளையாட்டு வீரர்! - madurai latest news

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சரின் காரை வழிமறித்து பேட்மிண்டன் வீரர் மனு அளித்தார்.

முதலமைச்சரின் காரை வழிமறித்த விளையாட்டு வீரர்
முதலமைச்சரின் காரை வழிமறித்த விளையாட்டு வீரர்

By

Published : May 21, 2021, 10:19 PM IST

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீரர், பயிற்சியாளர் பத்ரி நாராயணன். இவர் 17 பாரா பேட்மிண்டன் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்றவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பயிற்சியாளர் வேலை வேண்டுமென மனு அளித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மதுரையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். உயர் நீதிமன்றம் இவருக்கு அரசு வேலையைத் தர வேண்டும் என பரிந்துரைத்தது.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காரை வழிமறித்து தன்னுடைய மனுவை பெற்றுக் கொள்ளுங்கள் என பத்ரிநாராயணன் குரல் எழுப்பினார்.

முதலமைச்சரின் காரை வழிமறித்த விளையாட்டு வீரர்

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அவரை நேரில் அழைத்து அவருடைய மனுவை பெற்றுக் கொண்டதோடு, உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்தின் கரோனா பரிசோதனை அனுமதி ரத்து!

ABOUT THE AUTHOR

...view details