மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் கூறியதாவது, ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்களுக்கு விருப்பமான மையங்களை தாங்களே தேர்வுசெய்து கொள்ளலாம். போலியான இணையதளங்களை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். போலியான இணையதளம் உருவாக்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது, முகவரை நம்பவேண்டாம் பொதுமக்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
M - Passport முறையால் விரைவாக ஏழு நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. 15 வயதிற்குள் இருப்பவர்கள், 60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே உதவிக்கு உறவினர்களை அழைத்து வர அனுமதி உண்டு. மற்றவர்களுடன் உறவினர் யாரும் வரும் பட்சத்தில் அலுவலகத்தின் வெளியே அவர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படாது.