தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு, சிக்குன்குனியாவை கட்டுப்படுத்தக்கோரி வழக்கு! - சிக்குன்குனியா

டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தக்கோரி வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளது.

PIL
PIL

By

Published : Aug 18, 2021, 9:36 PM IST

மதுரை : டெங்கு, சிக்குன்குனியாவை உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த, நவீன மருந்துகளை பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநாகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பான விசாரணையில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே. கே. ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொதுநல மனு

முன்னதாக ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், “ தமிழ்நாட்டில் தற்போது டெங்கு,பன்றிகாய்ச்சல், உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகின்றன.

கொசுக்கள்

இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன. எனவே கொசுக்களால் பரவும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்கள், சிக்குன்குனியா உள்ளிட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க்கால நடவடிக்கை
டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்களை கட்டுப்படுத்த, நவீன மருந்துகளை பயண்படுத்தி கொசுக்களை ஒழிக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநாகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

டெங்கு தடுப்பு
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க வேண்டும். டெங்கு, ,உள்ளிட்ட காய்ச்சல் களால் பாதிக்கப்படுவோருக்கு ,சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது குறித்து, ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவலக வளாக கட்டடத்தை இடிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details