தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையை அச்சுறுத்தும் போதை மாத்திரை - மருந்தக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது - போதை மாத்திரை விவகாரம்

மதுரை: போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் உள்ளிட்ட நான்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

police
police

By

Published : Aug 29, 2020, 10:46 PM IST

மதுரை வில்லாபுரம் பகுதியில் பிரவீன்குமார் என்பவர், சொந்தமாக மருந்தம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வரும் இளைஞர்களுக்கு உரிய மருத்துவச் சீட்டு இல்லாமல் மதிமயக்கும் தன்மை கொண்ட தூக்க மாத்திரைகளை அதிக விலைக்கு லாப நோக்குடன் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, மதுரை ஜெயில் ரோடு அருகே மூன்று இளைஞர்கள் சந்தேகிக்கும்படி நின்றதைக் கண்ட கரிமேடு காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் கையில் மாத்திரை அட்டை இருந்துள்ளது.

அந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வில்லாபுரம் பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரவீன்குமார், போதை தரும் மாத்திரைகளை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். போதை மாத்திரைகளை கேட்கும் மாணவர்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரவீன்குமார் மருந்தகத்தில் காவல்துறையினர் சோதனை செய்தனர். மாத்திரை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் பிரவீன்குமார் மற்றும் மாத்திரை வாங்க வந்த பிரதீப்குமார், பாலமுருகன், ராம்குமார் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:'அமித் ஷா விரைவில் வீடு திரும்புவார்'- எய்ம்ஸ்

ABOUT THE AUTHOR

...view details