மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவருடைய மகன் ஷாஜகான். இவர் சென்னை மாநகர காவல் துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை விடுமுறைக்கு மதுரை வந்திருந்த நிலையில் இன்று அதிகாலை குடும்பத்துடன் வீட்டில் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. அதைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்தில் மதுரை மாநகர துணை ஆணையர் செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவ்வப்போது அந்த பகுதியில் குற்றச் சம்பவங்கள் ஈடுபட்டதாகவும், அதனை காவல் துறைக்கு தகவல் கொடுத்து அவர்களை கைது செய்ய ஷாஜகான் உதவியதாகவும் நினைத்துக்கொண்டு, அவர் மீது இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மதுரையில் பரபரப்பு...! - Madurai District News
மதுரை: சென்னையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
![ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மதுரையில் பரபரப்பு...! பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த வீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7364044-thumbnail-3x2-mdu.jpg)
பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த வீடு