தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பதிவேற்ற கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

சென்னை: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார், சிபிஎஸ்இ(CBSE), ஐசிஎஸ்இ(ICSE) பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்த கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்ற கிளை
Madurai highcourt

By

Published : Jun 15, 2021, 4:47 PM IST

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அதில்,"மத்திய அரசின், பள்ளி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE) யின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்ளை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி, இதுவரையில் ஏற்படுத்தி தரவில்லை.

மெட்ரிக் பள்ளிகள் விண்ணப்பங்களை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.

ஆர்டிஇ.யின் (RTE) கீழ் மாணவர் சேர்க்கையில் தனியார், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பல முறைகேடுகள் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பல மாணவர்கள் பள்ளியில் பயில முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசின் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 யின் கீழ், 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், இனிவரும் கல்வியாண்டுகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் தனியார், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்த, உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என, மனுவில் கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஒப்புதலுக்காகக் காத்திருப்பில் உள்ளது.

இரண்டு வாரத்திற்குள் இத்திட்டத்தின் செயல்முறை தொடங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து இம்மனுவுக்கு மாநில, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details