மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம். கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது தந்தையின் சகோதரி (அத்தை) மாரியம்மாள், திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். மாரியம்மாளுக்கு திருமணமாகவில்லை. அவர் என்னை மகனாக தத்தெடுத்துக் கொண்டார்.
அவர் என்னை மகனாக அறிவிக்கக்கோரி திண்டுக்கல் கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 2013ஆம் ஆண்டு பிப்.9ஆம் தேதி இறந்துபோனார். இதனால் எனக்கு கருணையின் அடிப்படையில் வேலை கேட்டு திண்டுக்கல் மாநகராட்சி ஆணையருக்கு 2013ஆம் ஆண்டு ஏப்.3ஆம் தேதி மனு அனுப்பினேன்.
அந்த மனு வரவில்லை என தெரிவிக்கப்பட்டதால் 2017ஆம் ஆண்டு ஏப்.7ஆம் தேதி மீண்டும் கருணை வேலை கேட்டு மனு அளித்தேன். அந்த மனுவை 2021ஆம் ஆண்டு அக். 20ஆம் தேதி மாநகராட்சி ஆணையர் நிராகரித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து கல்வித்தகுதி அடிப்படையில் கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.