மதுரையை சேர்ந்த வேரோணிக்கா மேரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் எனது தாயாரை உடல்நல குறைவால் அனுமதித்தோம். கரோனா மற்றும் ரத்த பரிசோதனை செய்வதற்கு கால தாமதமானதல் தனது தாயார் உயிரிழந்தார்.
தொடர்ந்து, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், உயிரிழப்புகள் தடுக்கப்படுகின்றன. அதுபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டால் பல உயிரிழப்புகள் தடுக்கப்படும்.
மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.