தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு - சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சிபிசிஐடி மற்றும் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு
தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு

By

Published : Mar 21, 2022, 12:09 PM IST

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், "இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே.

பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி மற்றும் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் - அனைத்து இடங்களையும் கைப்பற்றிய பாண்டவர் அணி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details