விருதுநகர்: காரியாபட்டியைச் சேர்ந்த கோபால் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்த ஆண்டும் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மே 28 தேதி கிடா சண்டை விழாவை நடத்த அனுமதி கோரி ஆவியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தும், இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
ஆகவே, மே 28ஆம் தேதி ஆவியூர், அய்யனார் கோயில் அருகே கிடா சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.