மதுரை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேவுள்ள முடிக்கரை கிராமத்திலுள்ள அய்யனார் மற்றும் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை எனவே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் என கூறி சிவகங்கை மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (ஆக. 08) நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், எஸ். ஸ்ரீமதி ஆகியோரது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.