தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிலம்மாள்புரத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அனுமதி கோரிய மனு தள்ளுபடி - நெல்லை கோவிலம்மாள்புரம்

நெல்லை கோவிலம்மாள்புரத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

Petition
Petition

By

Published : Sep 1, 2022, 9:38 PM IST

மதுரை: நெல்லை கோவிலம்மாள்புரத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அனுமதி மறுத்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து, சுவாமிதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், "மனுதாரர் குறிப்பிடும் கோவிலம்மாள்புரம் கிராமத்தில், 180 இந்து குடும்பங்களும், 10 கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளன. கிறிஸ்தவ ஆலயம்(சர்ச்) கட்டுவதற்கு அனுமதி கோரும் இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலும், 75 மீட்டர் தொலைவிலும் இரண்டு இந்துக் கோயில்கள் உள்ளன. இந்நிலையில் அங்கு கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும். இதன் காரணமாகவே மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆராய்ந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதால், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டா ரத்து.. உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details