தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை அதிமுக மாநாடு: தடைவிதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை! - அதிமுக மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன்

Madurai AIADMK conclave: மதுரையில் நடக்கவிருக்கும் அதிமுக மாநாட்டை தடை செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த வித பட்டாசுகள் வெடிக்க போவதில்லை என அதிமுகவின் மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

High Court Madurai Bench
உயர் நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Aug 18, 2023, 4:11 PM IST

மதுரை:காரைக்குடியைச் சேர்ந்த சேது முத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அதிமுக நடத்தவிருக்கும் மாநாட்டிற்க்கு தடை விதிக்குமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறம் உள்ள இடத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடைபெற இருக்கிருது.

அம்மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்லும் இந்த பகுதிகளில் விமானங்கள் தரையிறங்கும்போது மிகவும் தாழ்வாக பறந்து செல்கின்றன. அதனால் இப்பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே இருக்கின்றன" என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அப்பகுதி மத்திய தொழிற்படை பாதுகாப்பு மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பதாகவும், சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறுவதாகவும், அன்றைய தினம் மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும்போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும்போது விமானங்கள் தரையிறங்குவதில் இடையூறு ஏற்படக் கூடும் என்றும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து அம்மனுவில், அப்பகுதி விமான போக்குவரத்து துறையால் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தைச் சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை என்றும், மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றும், ஆகையால் ஆகஸ்ட் 20ஆம் தேதி பெருங்குடியில் அதிமுக மாநாடு நடத்த தடை விதித்து சம்பந்தப்பட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனு அளித்திருந்தார்.

இந்த மனு என்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நான்கு மாதத்திற்கு முன் மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் தடை கூறினால் எவ்வாறு முடியும்?" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் மாநாடு நிகழ்ச்சியின்போது எந்த வித வெடிபொருட்களோ அல்லது பட்டாசுகளோ வெடிக்கப் போவதில்லை என உறுதிமொழி அளித்துள்ளதாக அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் தகவல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: "தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சியை கைவிடுக" - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details