தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கோயில்களைத் திறக்கக்கோரி மனு

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பேருந்து சேவையைத் தொடங்கவும், கோயில்களைத் திறக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மனு
நீதிமன்றத்தில் மனு

By

Published : Jun 26, 2021, 6:54 AM IST

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், "கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பல கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கரோனா முழுமையாகக் குறைந்துள்ளது. அப்பகுதிகளில் மக்கள் வேலைக்குச் செல்வதற்குப் பேருந்து சேவை இல்லை.

மேலும் வேலைக்குச் செல்லும் மக்கள் அனைவருமே இருசக்கர வாகனத்தில் செல்ல இயலாத சூழல் உள்ளது.

பேருந்து சேவையை ஏற்படுத்தக்கோரி, மாநில அரசிடம் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். தற்போது உணவகங்கள், தேநீர்க்கடைகள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்பட்டுவருகின்றன.

எனவே, கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி கோயில்களைத் திறக்கவும், பொதுமக்கள் பயணிக்க பேருந்து சேவையைத் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: பாலாறு ஆக்கிரமிப்பு வழக்கு; ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details