மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ஸ்டாரின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்," கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால், நாடு முழுவதும் கடந்தாண்டு (2020) மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சுமார் 64 ஆயிரம் வழக்குரைஞர்கள் தங்களது வழக்குகளை நடத்த நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியவில்லை.
கரோனா தொற்றால் உயிரிழந்த வழக்குரைஞர்களுக்கு இழப்பீடு கோரி மனு! - கரோனா தொற்றால் உயிரிழப்பு
கரோனா தொற்றால் உயிரிழந்த வழக்குரைஞர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தகுந்த இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தற்போது கரோனா தொற்று இரண்டாம் அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சுமார் 230 வழக்குரைஞர்கள், உதவியாளர்கள் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தனர். நீதிமன்றப் பணியாளர்கள் பத்திரிகையாளர்கள், அரசு உதவியாளர்களை முன் களப்பணியாளர்கள் வரிசையில், தமிழ்நாடு அரசு இணைத்துள்ளது.
கரோனா தொற்றால் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்குகிறது. ஆனால் வழக்குரைஞர்கள், வழக்குரைஞரின் உதவியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்தனர். எனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முன் களப்பணியாளர்கள் வரிசையில், வழக்குரைஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் உதவியாளர்களை இணைத்து, கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.