தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை - விசாரணை ஒத்திவைப்பு! - ஒன்றிய

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற கிளை
உயர் நீதிமன்ற கிளை

By

Published : Jun 30, 2021, 6:59 PM IST

மதுரை: மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மதுரை மாநகர் தற்போது திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரையிலும் குடியிருப்பு பகுதிகள் விரிந்து காணப்படுகின்றன.

பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பிக் கிடக்கிற மதுரையில் ‘மெட்ரோ ரயில் திட்டம்’ வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த 2ஆவது பெரிய மாநகர பெருமைக்குரியதாக மதுரை மாவட்டம் திகழ்கிறது.

சென்னைக்கு அடுத்ததாக, போக்குவரத்து நெருக்கடியால் பெரும் அளவில் மதுரை மாநகர் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இத்திட்டத்தை அறிவிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகள் தாமதம் காட்டி வருகின்றன.

எனவே, மதுரை போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அமல் படுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து இம்மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்கலாமே: 'மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கட்டாயம்' -முதலமைச்சர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details