மதுரை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஜனவரி 10ஆம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா? - உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கலான புதிய மனு! - jallikattu is doubt to run this year
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசு ஆணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், கரோனா தொற்று குறைந்தபின்பு ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்தக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ள 300 வீரர்கள், 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கலந்துகொள்பவர்கள், போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள், மாடு வளர்ப்போர் ஆகியோர் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்; கரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்; மேலும் இந்த அரசாணையில் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விழாக்காலங்களில் மதுபானக்கடைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்ததை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Holiday for Pongal: பொங்கலுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை - அரசு அறிவிப்பு