கோவிட் - 19 வைரஸ் தொற்று மற்ற நாடுகளைப் போல பரவாமல் தடுக்க இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த மாதம் இறுதிவரை தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை சிவகாசியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,”தமிழ்நாட்டில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள், பார்கள் சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ளன. இங்கும் கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, மார்ச் மாதம் இறுதிவரை தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.