மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் சிலைகளை அவமரியாதை செய்வது, உடைப்பது போன்றவை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிலைகளை அமைப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் அரசு ஏராளமான தொகையை செலவிடுகிறது.
இந்நிலையில், மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைக்க தமிழ்நாடு உள்துறைச் செயலர் அனுமதி வழங்கியுள்ளார். அவர் சாதிய வழியிலான தலைவர் என்பதால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைக்க அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.