மதுரை:மதுரை மேலமடையைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், தனது வீட்டில் பறவைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்த்து வருகிறார். கடந்த ஜூலை 10ஆம் தேதி அவருடைய வீட்டிலிருந்த விலை உயர்ந்த நாய் திடீரென காணாமல் போனது. இது தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரவணக்குமார் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பட்டப்பகலில் கனரக வாகனத்தில் வந்த வாலிபர் நாய்க்கு உணவு அளித்து திருடிச் செல்வது தெரியவந்தது.