மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறிய, பெரிய கோயில்களில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதை எதிர்த்தும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியும் பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது 'திருவிழா': இதனையடுத்து நீதிபதி, 'இரு சாதியினர் இடைேய? இரு தரப்பினர் இடையே பிரச்னைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம். ஆனால் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடுவது தவறு எனக்கூற முடியாது. இதனை இந்த நீதிமன்றம் ஏற்காது. திருவிழாக்கள் என்பது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது.