மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இருபிரிவினரிடையே பிரச்னை நிலவிவருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் பாலம் அமைக்க மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு எட்டப்படாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பாலத்தை கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை அரசு அலுவலர்கள் தலைமையில் பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வந்தனர்.
மற்றொரு தரப்பினர் பொது இடத்தில் பாலம் கட்டுவதால் இரு தரப்பு மோதல் நடக்கும் என பாலத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரி எதிர்ப்பு தெரிவித்தனர்.