தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரை: வைகை அணையில் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

people-on-the-banks-of-the-vaigai-river-flood-risk-warning
people-on-the-banks-of-the-vaigai-river-flood-risk-warning

By

Published : Nov 23, 2020, 10:39 PM IST

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இந்நிலையில் எந்நேரமும் அணை நிரம்பிவழியும் என்பதால், வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, வாடிப்பட்டி ஆகிய வட்டாட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

வைகை கரையோரம் பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தவும், அப்பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

ABOUT THE AUTHOR

...view details