தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடையில் கைப்பைகள் வைத்து இடம்பிடித்த கிராம மக்கள் - குடும்ப அட்டை

மதுரை: அயன்பாப்பாகுடி கிராம மக்கள், ரேஷன் கடையில் நிவாரண பொருள்கள் வாங்க, கைப்பைகள் வைத்து இடம்பிடித்துள்ளனர்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

By

Published : Apr 4, 2020, 7:41 AM IST

தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000, அரிசி, பருப்புகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்களை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்னதாகவே வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு, சமூக இடைவெளி அனுசரித்து வரிசையில் 1000 ரூபாய் பணம், இலவச பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை

இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று மதுரையில் உள்ள, அயன்பாப்பாகுடி நியாயவிலைக் கடையின் முன்பாக அதிகாலையிலேயே மக்கள் இலவச பொருள்கள் வாங்க குவிந்தனர். அப்போது அவர்கள் ரேஷன் கடை முன்பு சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக போடப்பட்டுள்ள, வட்டம் இருக்கும் இடத்தில், தங்களது கைப்பைகள், ஹெல்மெட்களை வைத்து இடம்பிடித்தனர்.

இதன்மூலம் சமுக விலகல் குறித்த போதிய விழிப்புணர்வு என்பது தற்போது, வரையிலும் கிராமம், புறநகர் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு சென்று சேரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் எட்டாவது கரோனா கண்டறியும் மையம்!

ABOUT THE AUTHOR

...view details