தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயானம் செல்ல பாதையில்லை... நெற்பயிருக்குள் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள் - மதுரை மேலூர், மேலவளவு

மதுரை: மேலூரில் இறந்தவர் உடலை மயானத்துக்கு கொண்டுச் செல்ல பாதை இல்லாததால் விளைநிலம் நடுவே எடுத்துச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

people
people

By

Published : Dec 26, 2020, 11:39 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் கடந்த 65 வருடங்களாக இறந்தவர் உடலை மயான கரைக்கு கொண்டுச் செல்ல உரிய பாதை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து, பல முறை அலுவலர்களிடம் முறையிட்டும், புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று(டிச.26) அப்பகுதியில் வயதான மூதாட்டி கட்டச்சி (65) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை கொண்டுச் செல்ல மயான கரைக்கு பாதை இல்லாததால் விளைந்த நெற்பயிறுக்குள் நடுவே சடலத்தை சுமந்து செல்லும் அவலம் அரங்கேறியுள்ளது.

நெற்பயிருக்குள் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்

பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை, எங்களது கோரிக்கை அரசின் செவிகளில் கேட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு பொதுக்கல்லறை ஒதுக்கித் தரக் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details