தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவர் ஜெயந்தி: மதுரை வரும் முதலமைச்சர் - மக்களை அச்சுறுத்தும் பேனர்கள்

மதுரை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை வரும் முதலமைச்சரை வரவேற்க வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

madurai
madurai

By

Published : Oct 29, 2020, 5:49 PM IST

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி பசும்பொன் செல்வதற்காக இன்று மாலை 6.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். இதனையொட்டி அவரை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி சாலையின் இரு பக்கமும் பிரமாண்ட வளையங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தரப்பிலும், மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தரப்பிலும் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சாலை நடுவே வைக்கப்பட்ட பேனரால் சுபஷி என்பவர் உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.

முதலமைச்சரை வரவேற்க பிரமாண்ட பேனர்

அதிமுக ஆட்சியில் தொடரும் இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் போராடினாலும் ஆட்சியாளர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. மதுரையை தொற்றிக்கொண்டுள்ள இந்த பேனர் கலாசாரம் எப்போது முடிவுக்கு வரும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. மேலும், முதலமைச்சர் வருகை தரும் அதே விமானத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் வரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் கனமழை; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க ஆணையர் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details