தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் கடுமையாகும் நெறிமுறைகள்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

மதுரை: கரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரிப்பதையடுத்து முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

penalties
penalties

By

Published : Apr 8, 2021, 4:50 PM IST

மதுரையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக மதுரை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் முகக்கவசம் அணியாத நபர்களிடம் 200 ரூபாய் அபராதமாக விதித்து வருகின்றனர்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி

இதன் ஒரு பகுதியாக மதுரை, தல்லாகுளம் தமிழன்னை சிலை அருகே மாநகராட்சி அலுவலர்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களை பாரபட்சம் பார்க்காமல் நிறுத்தி அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதேபோல் அரசுப் பேருந்து, அனைத்து தனியார் வாகனங்களிலும் முகக் கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கும் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. வரும் நாள்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனா தடுப்பு நடவடிக்கையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்!'

ABOUT THE AUTHOR

...view details