மதுரை: அண்ணா பேருந்து நிலையம் அருகே கரோனா சிறப்பு மருத்துவமனை இயங்கிவருகிறது. தமிழ்நாடு அரசின் பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையாக இருந்த இவ்வளாகம் கரோனா தொற்றுக்குப் பிறகு கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கரோனா நோயாளிகள் இங்கே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந்த மனோகரன் (53) என்பவர் கரோனா தொற்று அறிகுறி காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து மனோகரன் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
மனோகரன் இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்துவந்தார். மதுப்பழக்கம் இருந்ததால் அது தொடர்பாக மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார்.