மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புறப் பாடல்கள் பாடிவந்த இவர், 'தூள்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதுவரை இவர் 25 படங்களில் நடித்துள்ளார்.
பரவை முனியம்மாவின் உடல் தகனம் - பரவை முனியம்மா இறப்பு
மதுரை: மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். பரவை முனியம்மாவின் மறைவு குறித்து திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பரவை முனியம்மாவின் உடல் அவரது சொந்த ஊரான பரவையில் உள்ள சுடுகாட்டில் இன்று எரியூட்டப்பட்டது. தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக முனியம்மாவின் இறுதி சடங்கில் நாட்டுப்புற கலைஞர்கள், நடிகர் அபி சரவணன் உள்ளிட்ட சிலரே கலந்துக்கொண்டனர்.