மதுரை:இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வண்டி எண் 06852 ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் இன்று ராமேஸ்வரம்- மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும்.
மேலும், வண்டி எண் 02206 ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலும் இன்று ராமேஸ்வரம் மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும்.