மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக மார்ச் 3ஆம் தேதியன்று காரைக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 3ஆம் தேதி பல்லவன் விரைவு ரயில் வழக்கம் போல் இயங்கும்! - இரட்டை ரயில் பாதை
இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பல்லவன் விரைவு ரயில் மார்ச் 3ஆம் தேதி வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Etv Bharat
தற்போது ரயில் இயக்கங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு பயணிகளின் வசதிக்காக மார்ச் 3ஆம் தேதியன்று காரைக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (20605) வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:குடிபோதையில் ரயில்வே ஊழியர் தவறவிட்ட ரூ.9 லட்சம் பணத்தை மீட்டுத்தந்த ரயில்வே காவலர்கள்!
Last Updated : Feb 15, 2023, 7:50 PM IST