மதுரை: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மேயர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதில், ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் புறப்பட்டபோது, விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அவரின் கார் மீது பாஜகவினர் காலணியை எறிந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள லயோலா ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.