தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Palani Murugan Temple - பழனி முருகன் கோவில்: இந்து அல்லாதவர் நுழையத்தடை பதாகையை மீண்டும் வைக்க உத்தரவு

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் நுழையத் தடை என்ற பதாகை ஏன் அகற்றப்பட்டது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மீண்டும் அதே இடத்தில் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

palani-murugan-temple-why-was-the-notification-banner-removed-the-judge-asked
இந்து அல்லாதவர் நுழைய தடைபதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jul 31, 2023, 5:13 PM IST

மதுரை:செந்தில்குமார் என்பவர், பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ''திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பழனி முருகன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்தச் சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிற ஒரு திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவரலால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே, பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும்' என உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு என்று நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜராகி இந்து அறநிலையத்துறை சட்டம் 1947 விதி 48-ன் படி இந்து அல்லாதவர்கள் இந்து கோயிலுக்குள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான ஆணை தெளிவாக உள்ளது. எனவே, பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் எனும் பதாகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி இந்து அல்லாதவர்கள் கோவிலில் நுழையத் தடை என்ற பதாகை ஏன் அகற்றப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்டனர். மேலும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் எனஅறிவுறுத்தி வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:என்.எல்.சி விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details