மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது துரைசாமி நகர். நகரில் மூன்றாவது தெருவிலுள்ள வீட்டொன்றில் நேற்றிரவு மின் இணைப்புப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்தத் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து மதுரை நகர்ப்புற தீயணைப்புத் துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ: தீயணைப்புத் துறையின் துரித பணியால் அசம்பாவிதம் தவிர்ப்பு! - madurai news
மதுரை: பழங்காநத்தம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை, தீயணைப்புத் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
![மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ: தீயணைப்புத் துறையின் துரித பணியால் அசம்பாவிதம் தவிர்ப்பு! மதுரை செய்திகள் மின்கசிவால் ஏற்பட்ட தீ பழங்காநத்தம் madurai news madurai palanganatham accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7925985-thumbnail-3x2-fireaccident.jpg)
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். முன்னதாக, மின்சார வாரியத்திற்குத் தகவல் கொடுத்து அப்பகுதிக்கு வரக்கூடிய மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் துரித பணி காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:கூலிப்படையை ஏவி இளைஞர் மீது தாக்குதல் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!