பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வெற்றிபெற்ற வீரர்கள் பேட்டியளித்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்கள் பேட்டி - palamedu jallikattu winners interview
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்ததையடுத்து வெற்றிபெற்ற வீரர்கள் பேட்டியளித்துள்ளனர்.
முதலாவது பரிசு பெற்ற பிரபாகர், கடந்த 2014 முதல் மாடு பிடிப்பத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதுநாள் வரையில் கார் பரிசுகள் போன்றவை பெற்றதில்லை. முதல் பரிசு பெற்றது எனக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது. என் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு சுற்றும் சோர்வடையும் போதெல்லாம் நண்பர்கள் ஊக்கத்தின் மூலம் வெற்றியடைந்தேன் என தெரிவித்தார்.
இரண்டாவது பரிசு பெற்ற ராஜா, இரண்டாம் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள் வழிகாட்டுதலின்படி வெற்றிபெற்றதாகக் கருதுகிறேன். தொடர்ந்து கால்களில் காயமடைந்ததால் சிறப்புடன் செயல்பட முடியவில்லை. அடுத்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பேன் என தெரிவித்தார். மேலும், முதல் பரிசாக கார் வழங்கினார்கள். ஆனால் இரண்டாம் பரிசாக கோப்பை மட்டுமே வழங்கியதாக வேதனையுடன் கூறினார்.